/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ நாட்டரசன்கோட்டைக்கு கூடுதல் பஸ் அவசியம் நாட்டரசன்கோட்டைக்கு கூடுதல் பஸ் அவசியம்
நாட்டரசன்கோட்டைக்கு கூடுதல் பஸ் அவசியம்
நாட்டரசன்கோட்டைக்கு கூடுதல் பஸ் அவசியம்
நாட்டரசன்கோட்டைக்கு கூடுதல் பஸ் அவசியம்
ADDED : மே 28, 2025 07:26 AM
சிவகங்கை : நாட்டரசன்கோட்டை சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு கண்ணுடைய நாயகி, வெங்கடாசலபதி பெருமாள், சிவன் கோயில்கள் உள்ளன. இது தவிர சிறு வர்த்தக நகரம் போன்று செட்டிநாடு பலகாரம் தயாரிப்பு நிறுவனங்களும் செயல்படுகின்றன.
இந்நகருக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளன.இவர்களின் வருகைக்கு ஏற்ப நாட்டரசன்கோட்டைக்கு காலை, மாலை இரு வேளை மட்டுமே அரசு டவுன் பஸ்கள் வந்து செல்கின்றன. சுற்றுலா பயணிகள் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க மதுரை - தொண்டி இடையே செல்லும் பஸ்களை நாட்டரசன்கோட்டைக்குள் சென்று வர உத்தரவிட வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபியிடம், பேரூராட்சி மக்கள் மனு அளித்தனர்.