ADDED : மே 20, 2025 12:58 AM
மானாமதுரை,: மானாமதுரை தாலுகாவிற்குட்பட்ட பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மற்றும் பிற அமைப்புகள் சம்பந்தமாக நடப்பட்டுஉள்ள கொடி கம்பங்களை மே 30க்குள் அகற்றிக் கொள்ளுமாறு தாசில்தார் கிருஷ்ணகுமார் கேட்டு கொண்டுள்ளார்.
அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மானாமதுரை தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்கள் மற்றும் நகரப் பகுதி பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்களை அந்தந்த அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் மே 30க்குள் அகற்றிக் கொள்ள வேண்டும்.
அப்படி அகற்றாத பட்சத்தில் வருவாய் துறையின் மூலம் அகற்றப்பட்டு அதற்கான செலவு தொகையை அந்தந்த அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்களிடம்வசூல் செய்து அரசு கணக்கில் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.