/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/அவலம்: தரம் உயர்த்தாததால் படிப்பை தொடராத மாணவர்கள்: நுாறு சதவீத தேர்ச்சி பெறும் அரசு உயர்நிலைப் பள்ளிகளைஅவலம்: தரம் உயர்த்தாததால் படிப்பை தொடராத மாணவர்கள்: நுாறு சதவீத தேர்ச்சி பெறும் அரசு உயர்நிலைப் பள்ளிகளை
அவலம்: தரம் உயர்த்தாததால் படிப்பை தொடராத மாணவர்கள்: நுாறு சதவீத தேர்ச்சி பெறும் அரசு உயர்நிலைப் பள்ளிகளை
அவலம்: தரம் உயர்த்தாததால் படிப்பை தொடராத மாணவர்கள்: நுாறு சதவீத தேர்ச்சி பெறும் அரசு உயர்நிலைப் பள்ளிகளை
அவலம்: தரம் உயர்த்தாததால் படிப்பை தொடராத மாணவர்கள்: நுாறு சதவீத தேர்ச்சி பெறும் அரசு உயர்நிலைப் பள்ளிகளை
ADDED : மே 20, 2025 12:57 AM

மானாமதுரை தாலுகாவிற்கு உட்பட்ட வேதியரேந்தல், மேலநெட்டூர் உள்ளிட்ட அரசு உயர்நிலைப்பள்ளிகள் அரசு பொது தேர்வில் சில வருடங்களாக 100 சதவீததேர்ச்சியை பெற்று வருகின்றன.
கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் மேல்நிலைப் படிப்புகளுக்காக அருகில் உள்ள மானாமதுரை, சிவகங்கை, இளையான்குடி, பரமக்குடி போன்ற ஊர்களுக்கு பஸ்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் ஏராளமான மாணவர்கள் மேல்நிலை படிப்பை கைவிட்டு விடுகின்றனர்.
கிராமங்களில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் பங்களிப்பு தொகையை அரசு கணக்கில் செலுத்தி கல்வித்துறை அதிகாரிகளிடமும், மக்கள் பிரதிநிதிகளிடமும் நீண்ட வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் ஒவ்வொரு கல்வி ஆண்டு துவங்கும் முன்பு தரம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கும் கிராமத்தினர் வருடம் தோறும் ஏமாற்றத்தை சந்தித்து வருகின்றனர்.
கீழநெட்டூர் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் கூறியதாவது:
எங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள மேலநெட்டூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் வருடம் தோறும் 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது. மேலும் அனைத்து மாணவர்களும் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று வருகின்றனர். இவர்கள் மேல்நிலைப் படிப்பிற்காக அருகில் உள்ள நகர் பகுதிகளுக்கு செல்வதற்கு 2 பஸ்கள் மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மேலும் கூடுதலாக பணமும் செலவாகி வருவதால் கிராம பகுதிகளில் கூலி மற்றும் விவசாய வேலை பார்க்கும் பெற்றோர்களின் நிலையை எண்ணி நன்றாக கல்வி பயிலும் ஏராளமான மாணவர்கள் மேல்நிலைப் படிப்பை தொடர முடியாமல் படிப்பை கைவிடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஒரு சில மாணவர்கள் நகர் பகுதிகளுக்கு மேல்நிலைப் படிப்பிற்கு சென்றாலும் அவர்கள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வருவதற்கு இரவு 8:00 மணிக்கு மேலாவதால் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
வேதியரேந்தல் கிராமத்தை சேர்ந்த நாகராஜன் கூறியதாவது:
வேதியரேந்தல் அரசு உயர்நிலைப் பள்ளியும் வருடம்தோறும் 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது. கிராம பங்களிப்பு தொகையான ரூ.2 லட்சத்தை கட்டி 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால் கல்வித்துறை அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மாணவர்களின் கல்வித் திறன் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது என்றார்.
கல்வித்துறை அதிகாரி கூறியதாவது:
மானாமதுரை, இளையாங்குடி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் தகுதி வாய்ந்த அரசு உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டுமென்று அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம், விரைவில் ஒவ்வொன்றாக மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.