ADDED : செப் 12, 2025 04:24 AM
திருப்புத்துார்: திருப்புத்துாரில் நீண்ட நாட்களுக்குப் பின் நேற்று மாலை பெய்த மழையால் வெப்பம் தணிந்தது.
திருப்புத்துாரில் கடந்த இரண்டு மாதங்களாக பெரிய அளவில் மழை பெய்யவில்லை. பல முறை மேகம் கூடி வந்தாலும், சிறு துாறலுடன் மழையை காற்று அடித்துச் சென்றது. பல நேரம் சில நிமிடங்கள் மட்டும் துாறல் விழுந்தது. நேற்று பகலில் நல்ல வெயில் அடித்த நிலையில், மாலை 5:00 மணி அளவில் வழக்கம் போல மேகம் கறுத்து மழை பெய்யத்துவங்கியது. காற்றுடன் பலத்த மழை தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் பெய்த மழையால் நகரின் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ணம் நிலவியது.