ADDED : செப் 09, 2025 04:12 AM
காரைக்குடி: காரைக்குடி ராஜராஜன் தொழில்நுட்பக் கல்லூரியில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பில் யஷ்வந்த் ராவ் கேல்கர் பிறந்த தினம், தேசிய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பேராசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
காரைக்கால் தேசிய தொழில்நுட்ப கழக இயக்குனர் கங்ரேகர், ஆர்.எஸ்.எஸ். தென் பாரத தலைவர் வன்னியராஜன், ஏ.பி.வி.பி., அகில பாரத துணைத் தலைவர் நாகலிங்கம், அழகப்பா பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.