/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பெண்ணை தாக்கி செயின் பறிக்க முயற்சி பெண்ணை தாக்கி செயின் பறிக்க முயற்சி
பெண்ணை தாக்கி செயின் பறிக்க முயற்சி
பெண்ணை தாக்கி செயின் பறிக்க முயற்சி
பெண்ணை தாக்கி செயின் பறிக்க முயற்சி
ADDED : செப் 09, 2025 04:12 AM
சிவகங்கை: சிவகங்கை அருகே வண்டவாசியை சேர்ந்தவர் மனோகரன் மனைவி தனஸ்ரீ 22.
இவர் ஆக.28ம் தேதி மதியம் 1:00 மணிக்கு வீட்டில் குழந்தையுடன் இருந்தார். அப்போது ஒரு பெண் தண்ணீர் கேட்டு வீட்டுக்குள் வந்துள்ளார். தண்ணீர் கொடுத்தபோது அந்த பெண் தனஸ்ரீ கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்துள்ளார்.
சுதாரித்துக்கொண்ட தனஸ்ரீ தனது வீட்டின் முகப்பு கதவை மூடினார்.கதவை திறக்காவிட்டால் குழந்தையை கொன்று விடுவதாக அந்த பெண் மிரட்டினார். தனஸ்ரீ கதவை திறந்ததும் செயினை அங்கேயே போட்டு விட்டு அந்த பெண் தப்பியோடினார்.