/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/கேரள சிறையில் தப்பிய கைதி காரைக்குடி காதலியுடன் கைதுகேரள சிறையில் தப்பிய கைதி காரைக்குடி காதலியுடன் கைது
கேரள சிறையில் தப்பிய கைதி காரைக்குடி காதலியுடன் கைது
கேரள சிறையில் தப்பிய கைதி காரைக்குடி காதலியுடன் கைது
கேரள சிறையில் தப்பிய கைதி காரைக்குடி காதலியுடன் கைது
ADDED : பிப் 23, 2024 10:31 PM

காரைக்குடி:காரைக்குடியில் உள்ள பாரதி நகரைச் சேர்ந்தவர் அப்சரா, 27. இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வசித்து வருகிறார். காலேஜ் ரோட்டில் டாட்டூ கடை நடத்தி வருகிறார். இவரது தாய் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால் அடிக்கடி கேரளாவுக்கு சென்று வந்தார். அப்போது ஹர்ஷத், 33. என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
கடந்த செப்., மாதம் ஹர்ஷத் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்று கண்ணுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அப்சரா சிறைக்கு சென்று அவரை அடிக்கடி பார்த்து வந்தார். ஜன.,14 மத்திய சிறையில் இருந்து ஹர்ஷத் தப்பினார். கேரளா போலீசார் தேடி வந்த நிலையில், அப்சராவுடன், ஹர்ஷத் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.
காரைக்குடிக்கு வந்த கேரள போலீசார், ஏ.எஸ்.பி., ஸ்டாலின் உதவியோடு அப்சராவை கைது செய்து விசாரித்தனர். அப்சராவின் வீட்டில் ஹர்ஷத் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அவரை காரைக்குடி போலீசார் கைது செய்து, கேரளா போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரையும் போலீசார் கைது செய்து கேரளா அழைத்துச் சென்றனர்.