ADDED : ஜூன் 05, 2025 01:18 AM

திருப்புத்துார்: புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு முத்தமிழ் சங்கத்தினர் பாராட்டு விழா நடத்தினர். இப் பள்ளி மாணவி சுவேதா பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்தில் நுாறு மதிப்பெண் பெற்றார். மாணவிக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மவுண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கல்வி சார் முதல்வர் குமரேஷிற்கு தமிழ் மொழியின் தொன்மைத் திறத்தை வளர்ப்பில் அவரது பங்களிப்பை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது.