ADDED : செப் 05, 2025 11:49 PM
சிவகங்கை: சிவகங்கை அருகே தமறாக்கி வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் ஆனை செல்வம் 25.
இவரை வெளிநாடு அனுப்புவதாக கூறி, திருப்பூர் சரவணன் நகரை சேர்ந்த பாலசுப்பிர மணியன் மகன் கருப்பச்சாமி வினோத்குமார் 35, ரூ.2.50 லட்சம் வரை பெற்றார்.
ஆனால், பணத்தை பெற்று வெளிநாட்டிற்கு அனுப்பாமல் மோசடியில் ஈடுபட்டார். இது குறித்து ஆனைசெல்வம் புகாரின்படி சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் இளையராஜா வழக்கு பதிந்துள்ளார்.