ADDED : செப் 05, 2025 11:49 PM

மானாமதுரை: மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு, சுகாதாரத்துறை மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் சார்பில் எய்ட்ஸ், பால்வினை நோய், மற்றும் வளர் இளம் பருவம் பற்றிய விழிப்புணர்வு பள்ளி மாணவர்கள், மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து மானாமதுரை அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவ அலுவலர் பூர்ணசந்திரன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் சார்பில் மானாமதுரையில் ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.