ADDED : மே 31, 2025 11:34 PM
சிவகங்கை: ஒக்கூர் அருகே சருகனியாற்றின் கரையோரங்களில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்து பணியை துவக்கி வைத்தார்.
அலவாக்கோட்டை கண்மாய் உபரி நீரிலிருந்து உருவாகி நாமனுார், பெருங்குடி, ஒக்கூர், நகரம்பட்டி மற்றும் பாகனேரி வழியாக செல்லும் சருகனி ஆற்றில் துார்வாரும் பணியானது அரசுடன் இணைந்து சேதுபாஸ்கரா வேளாண்மைக் கல்லுாரி நிறுவனர் மற்றும் இயற்கையை பாதுகாக்கும் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் நடந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து ஒக்கூர் அருகே வீழனேரி பகுதியிலுள்ள சருகனியாற்று கரையோரங்களில் 1000 மரங்கன்றுகள் நடும் பணி துவங்கியது.
மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை திட்ட இயக்குநர் வானதி, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்கள் முத்துராமலிங்கம், முருகன், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.