Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பிறப்பு, இறப்பு சான்றிதழுக்கு மக்கள் அலைக்கழிப்பு

பிறப்பு, இறப்பு சான்றிதழுக்கு மக்கள் அலைக்கழிப்பு

பிறப்பு, இறப்பு சான்றிதழுக்கு மக்கள் அலைக்கழிப்பு

பிறப்பு, இறப்பு சான்றிதழுக்கு மக்கள் அலைக்கழிப்பு

ADDED : செப் 11, 2025 06:01 AM


Google News
காரைக்குடி : காரைக்குடி சூரக்குடியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு தினமும் 200க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மாதத்திற்கு 300க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெறுகிறது. தமிழகத்தில் சுகாதாரத்துறை சார்பில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் அந்தந்த பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிறப்பு இறப்பு பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் பதிய ரூ.500 வரை சேவை கட்டணமாக பெறப்படுகிறது. இந்நிலையில் காரைக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள பிறப்பு இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் ரூ.200 வரை கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து குமார் கூறுகையில்: எனது மகனுக்கு ஆதார் எடுப்பதற்காக பிறப்புச் சான்றிதழ் கொண்டு சென்ற போது முகவரி மாறி இருப்பதாக தெரிவித்தனர். முகவரியை சரி செய்ய, காரைக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள அலுவலகத்திற்கு வந்தோம். ஆன்லைனில் விண்ணப்பிக்க ரூ.500 பிரிண்ட் எடுக்க ரூ.200 என ரூ.700 வரை கேட்கின்றனர். மேலும் குறிப்பிட்ட ஒரு கடைக்கு சென்று எடுக்கச் சொல்கின்றனர்.

அதிகாரிகள் கூறுகையில்: சிலர் சான்றிதழ் பதிவு செய்வதற்கும் பெயர் மாற்றம் செய்வதற்கும் தாமதமாக வருவார்கள். அதுபோன்று தாமதமாக வந்தால் ஆண்டுக்கு ரூ. 200 வீதம் கட்ட வேண்டும். சான்றிதழ் பதிவிற்கு ரூ. 500 ஆன்லைனில் செலுத்த வேண்டும். கருவூலம் மற்றும் வங்கிகளில் உரிய நேரத்தில் செலான் எடுக்க முடியாதவர்கள் கடைகள் மூலம் விண்ணப்பம் செய்கின்றனர். குறிப்பிட்ட கடைக்கு செல்ல யாரையும் வற்புறுத்தவில்லை. ஆன்லைனில் பதிவு செய்வது மட்டுமே எங்கள் வேலை. நாங்கள் பிரிண்ட் எடுத்து தருவதில்லை. கடைகளில் ஆன்லைனில் எங்கு வேண்டுமோ பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். இதனை மக்கள் தவறாக புரிந்து கொள்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us