/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மானாமதுரையில் ரோட்டில் குவியும் புழுதி மண் மானாமதுரையில் ரோட்டில் குவியும் புழுதி மண்
மானாமதுரையில் ரோட்டில் குவியும் புழுதி மண்
மானாமதுரையில் ரோட்டில் குவியும் புழுதி மண்
மானாமதுரையில் ரோட்டில் குவியும் புழுதி மண்
ADDED : செப் 11, 2025 05:40 AM

மானாமதுரை : மானாமதுரையில் உள்ள ரோடுகளின் நடுவே தேங்கும் புழுதி மண் குவியலால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மானாமதுரையில் சிவகங்கை ரோடு, அண்ணாதுரை சிலையிலிருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லும் ரோடு , பைபாஸ் ரோடு, பரமக்குடி, தாயமங்கலம் உள்ளிட்ட ரோடுகளின் நடுவே டிராபிக் போலீசார் ஆங்காங்கே தடுப்புகளை வைத்துள்ளனர். இங்கு கடந்த ஒரு வருடமாக மணல் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மணல் குவியலாக இருப்பதால் சைக்கிள் மற்றும் டூவீலர்களில் செல்பவர்கள் அதில் வழுக்கி கீழே விழுந்து காயமடைகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர் மானாமதுரை ரோடுகளில் தேங்கியுள்ள மணல் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.