/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிக்கலில் சிக்கி தவிக்கும் மானாமதுரை மக்கள் சிக்கலில் சிக்கி தவிக்கும் மானாமதுரை மக்கள்
சிக்கலில் சிக்கி தவிக்கும் மானாமதுரை மக்கள்
சிக்கலில் சிக்கி தவிக்கும் மானாமதுரை மக்கள்
சிக்கலில் சிக்கி தவிக்கும் மானாமதுரை மக்கள்
ADDED : ஜூன் 20, 2025 11:59 PM

மானாமதுரை: மானாமதுரை மையப்பகுதியில் உள்ள அண்ணாதுரை சிலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மக்கள் சிரமப்படுகின்றனர் இங்குள்ள சிலை சேதமடையாமல் இருக்க முக்கோண வடிவில் இருக்கும் சிலை பகுதியை ரவுண்டானாவாக மாற்ற வேண்டுமென்று எதிர்பார்க்கின்றனர்.
மானாமதுரை நகராட்சி பகுதி நாளுக்கு நாள் வளர்ந்து வருவதால் மானாமதுரையை ஒட்டியுள்ள கிராம பகுதிகளிலும் ஏராளமான குடியிருப்புகள் பெருகி வருகின்றன. நகருக்குள் எப்போதும் அதிகளவில் சரக்கு வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் டூவீலர்கள் சென்று வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் சிரமப்பட்டனர்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு டிராபிக் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்வரன் தலைமையிலான போலீசார் மானாமதுரை நகர் பகுதியில் உள்ள முக்கிய ரோடுகளின் நடுவே தடுப்பு அமைத்தும், ஒரு வழிப் பாதையை அமல்படுத்தியதால் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் விபத்துக்களும் குறைந்து வருகிறது.
மேலும் மையப்பகுதியில் முக்கோண வடிவில் உள்ள அண்ணாதுரை சிலையை சுற்றிலும் தடுப்பு வைத்து வாகனங்களை நான்கு பக்கங்களிலும் உள்ள ரோட்டில் திருப்பி விடுகின்றனர்.
முக்கோண வடிவில் சிலை பகுதி அமைந்திருப்பதால் வாகனங்களை திருப்புவதற்கு வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.அதிக நீளம் கொண்ட வாகனங்களை திருப்ப முடியாமல் கட்டுமானத்தில் இடிக்கும் நிலை ஏற்படுகிறது.
முக்கோண வடிவில் உள்ள அண்ணாதுரை சிலை பகுதியை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படும் வகையில் அண்ணாதுரை சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.