Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ குன்றக்குடியில் பங்குனி உத்திர விழா   ஏப். 2ல் கொடியேற்றம், ஏப். 10 ல் தேரோட்டம்  

குன்றக்குடியில் பங்குனி உத்திர விழா   ஏப். 2ல் கொடியேற்றம், ஏப். 10 ல் தேரோட்டம்  

குன்றக்குடியில் பங்குனி உத்திர விழா   ஏப். 2ல் கொடியேற்றம், ஏப். 10 ல் தேரோட்டம்  

குன்றக்குடியில் பங்குனி உத்திர விழா   ஏப். 2ல் கொடியேற்றம், ஏப். 10 ல் தேரோட்டம்  

ADDED : மார் 19, 2025 06:48 AM


Google News
சிவகங்கை, : குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் ஏப்.,2 ல் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருவிழா துவங்குகிறது.

குன்றக்குடி ஆதின மடத்திற்கு சொந்தமான குன்றக்குடி சண்முக நாத பெருமான் கோயிலில், பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெறும். ஏப்., 1 அன்று மாலை 5:00 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜை நடைபெறும்.

ஏப்., 2ம் தேதி அதிகாலை 5:00 மணி முதல் 5:45 மணிக்குள் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருவிழா துவங்கும். விழாவை முன்னிட்டு தினமும் இரவு 8:00 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் சண்முக நாத பெருமான் வெள்ளி கேடக வாகனத்தில் வீதி உலா வருவார். ஏப்., 6ம் தேதி மாலை 6:00 மணிக்கு வள்ளி முருகன் திருக்கல்யாணம் நடைபெறும்.

அன்று இரவு 9:00 மணிக்கு பூப்பல்லக்கு நடைபெறும். ஏப்., 8 ம் தேதி இரவு 8:00 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறும். திருவிழாவின் எட்டாம் நாளான ஏப்., 9ம் தேதி இரவு 8:00 மணிக்கு வையாபுரி தெப்பத்தில் தெப்ப உற்சவம் மற்றும் இரவு வெள்ளி ரத புறப்பாடும் நடைபெறும். ஒன்பதாம் நாளான ஏப்., 10ம் தேதி காலை 5:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் எழுந்தருள்வார்.

அன்று மாலை 4:30 மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தேர் வடம் பிடித்து துவக்கி வைக்க, தேரோட்டம் நடைபெறும்.

பத்தாம் நாளான ஏப். 11 அன்று காலை 11:15 மணிக்கு தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி உற்ஸவம் நடைபெறும்.

அன்று இரவு 8:00 மணிக்கு மயிலாடும்பாறையில் சுவாமி எழுந்தருளலுடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெறும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us