ADDED : மார் 25, 2025 09:54 PM

சிங்கம்புணரி: எஸ்.புதுார் அருகே கரிசல்பட்டி முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா நடந்தது.
விழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். பெண்கள் பூத்தட்டு எடுத்து வந்து பூச்சொரிதல் நடத்தினர்.
அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். கரிசல்பட்டி, சேர்வைக்காரன்பட்டி, தேனம்பட்டி, தேத்தாம்பட்டி, பள்ளபட்டி, நல்லவன்பட்டி ஆகிய ஆறு ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் பால்குடம் பூத்தட்டு சுமந்து வந்து வழிபாடு செய்தனர்.
மார்ச் 31ஆம் தேதி முத்து மாரியம்மனுகு காப்பு கட்டுதல் விழாவும், ஏப். 7-ஆம் தேதி பங்குனி பொங்கல் விழாவும் நடக்கிறது.