Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மதுரை - தஞ்சாவூர் புதிய ரயில் பாதை அமையுமா

மதுரை - தஞ்சாவூர் புதிய ரயில் பாதை அமையுமா

மதுரை - தஞ்சாவூர் புதிய ரயில் பாதை அமையுமா

மதுரை - தஞ்சாவூர் புதிய ரயில் பாதை அமையுமா

UPDATED : மார் 26, 2025 06:10 AMADDED : மார் 25, 2025 09:54 PM


Google News
Latest Tamil News
திருப்புத்துார் வட மாவட்டங்களையும் தென் மாவட்டங்களையும் இணைக்கும் முக்கியமான போக்குவரத்து மையமாகும். இதனால் திருப்புத்துார் வழியாக சென்னை -கன்னியாகுமரி தொழிற்வடச்சாலை, மானாமதுரை- பெரம்பலுார், மேலுார்- காரைக்குடி, பிள்ளையார்பட்டி- தஞ்சாவூர் ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் உருவாகி வருகின்றன.

ஆனால் ரயில்பாதை ஏதும் திருப்புத்துார் வழியாக அமைக்கப்படவில்லை. பிரிட்டிஷ் ஆட்சியில் ராணுவ தேவைக்காக, பாதுகாப்பு கருதி போடப்பட்ட ரயில்பாதைகளே இன்றளவும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளன. அகலபாதையாக மாற்றப்பட்டதே தவிர கூடுதலாக ரயில்பாதை இதுவரை அமைக்கப்படவில்லை.

10 ஆண்டுகளுக்கு முன்பு திருப்புத்துார் வழியாக காரைக்குடி -மதுரை, காரைக்குடி -திண்டுக்கல் ஆகிய புதிய ரயில்பாதைகளுக்கு ஆய்வு செய்யப்பட்டு கைவிடப்பட்டன. காரைக்குடி -துாத்துக்குடி ரயில்பாதையும் ஆய்வுடன் நின்று விட்டது.

வர்த்தகம், ஆன்மிகம் உள்ளிட்டவற்றிற்காக அதிகமான வாகனப் போக்குவரத்து உள்ள மதுரை- தஞ்சாவூர் வழித்தடத்திலும் புதிய ரயில்பாதைக்கு 4 மாவட்ட மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தியும் ஆய்வுக்கு கூட ரயில்வேத் துறையினர் பரிசீலிக்கவில்லை.

தற்போது மேலுாரிலிருந்து காரைக்குடி வரை நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது.

தொடர்ந்து இந்த ரோட்டில் பிள்ளையார்பட்டியிலிருந்து தஞ்சாவூருக்கு 4வழிச்சாலை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நிறைவேற்றப்பட உள்ளது. அதற்கான அளவீடு பணி நடந்து வருகிறது.

இதன் மூலம் மதுரை -தஞ்சாவூருக்கு திருமயம், புதுக்கோட்டை செல்லாமல் நேரடி நான்குவழி விரைவுச் சாலை வசதி ஏற்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பயண துாரத்தில் 10 கி.மீ.துாரம் வரை குறையும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

சாலை போக்குவரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வசதியை, ரயில் பயணத்திலும் ஏற்படுத்த இப்பகுதியினர் நீண்டகாலமாக கோரியுள்ளனர்.

இந்த நான்குவழிச்சாலைக்கு இணையாக புதிய ரயில்வே பாதை அமைக்க ரயில்வேத்துறையினர் ஆய்வு நடத்த வேண்டும்.

இதன் மூலம் தஞ்சாவூர், மதுரை ஆகிய இரு ஆன்மிக நகர்களை மட்டுமின்றி இடைப்பட்ட பிள்ளையார்பட்டி, திருக்கோஷ்டியூர் உள்ளிட்ட பல ஆன்மிகத் தலங்களையும், புராதன செட்டிநாட்டையும் இணைப்பதாக புதியரயில் பாதை அமையும். இந்த புதிய ரயில்பாதை மூலம் பல பேரூராட்சிகள், கிராமங்கள் ரயில் வசதியையும் பெறும். இதனால் இப்பகுதி ஆன்மிக, புராதன சுற்றுலா மட்டுமின்றி வர்த்தகமும், வேளாண் வணிகமும், மருத்துவ சுற்றுலாவும் அதிகரிக்கும்.

மேலும் இந்த ரயில்பாதை மூலம் மதுரையிலிருந்து திண்டுக்கல், திருச்சி செல்லாமல் நேரடியாக தஞ்சாவூர், அரியலூர், விழுப்புரம் மூலம் சென்னைக்கு செல்லும் வாய்ப்பும் உருவாகும்.

இதன் மூலம் சென்னைக்கு செல்லும் மதுரை ரயில் பயணிகளுக்கு 40 கி.மீ.க்கும் அதிகமான துாரப் பயணம் குறையும்.

மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய 4 மாவட்ட மக்களுக்கு பலனளிக்கும் மதுரை- - திருப்புத்துார் - - தஞ்சாவூர் புதிய ரயில்பாதை திட்டம் குறித்து ஆய்வு செய்ய தென்னக ரயில்வே முன்வர வேண்டும்.

திருப்புத்துார், மார்ச் 26--

கேட்டும் ரயில் பாதை இல்லை

மக்கள் எந்த கோரிக்கையையும் வைக்காமலிருக்கும் போதே திருப்புத்தூர் வழியாக தேசிய நெடுஞ்சாலைகளை மத்திய அரசு அமைத்து வருகிறது. சாலை போக்குவரத்தை மேம்படுத்த இந்த மாற்றம் அவசியம் எனில் அதே போல ரயில்பாதையிலும் பல புதிய பாதைகளை உருவாக்கி மேம்படுத்த வாய்ப்பு இருந்தும் நடைமுறைப்படுத்த மத்திய அரசு முன்வராதது இப்பகுதி மக்களிடையே கவலையைத் தந்துள்ளது. இதனால் தொழில்,விவசாயத்தில் பின்தங்கியுள்ள சிவகங்கை மாவட்ட வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. புதிய ரயில்பாதை களை மக்கள் நலனுக்காக அமைக்க அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மதுரையிலிருந்து திருப்புத்துார் வழியாக தஞ்சாவூர் செல்ல புதிய ரயில்பாதை அமைக்க பொதுமக்கள் நீண்ட காலமாக எதிர்பார்க்கின்றனர். மதுரையிலிருந்து குறுகிய துாரத்தில் சென்னை செல்ல புதிய ரயில்வழித்தடத்தை உருவாக்க வாய்ப்புள்ள இந்த ரயில்பாதையை அமைக்க தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

கேட்டும் ரயில் பாதை இல்லை

மக்கள் எந்த கோரிக்கையையும் வைக்காமலிருக்கும் போதே திருப்புத்தூர் வழியாக தேசிய நெடுஞ்சாலைகளை மத்திய அரசு அமைத்து வருகிறது. சாலை போக்குவரத்தை மேம்படுத்த இந்த மாற்றம் அவசியம் எனில் அதே போல ரயில்பாதையிலும் பல புதிய பாதைகளை உருவாக்கி மேம்படுத்த வாய்ப்பு இருந்தும் நடைமுறைப்படுத்த மத்திய அரசு முன்வராதது இப்பகுதி மக்களிடையே கவலையைத் தந்துள்ளது. இதனால் தொழில்,விவசாயத்தில் பின்தங்கியுள்ள சிவகங்கை மாவட்ட வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. புதிய ரயில்பாதை களை மக்கள் நலனுக்காக அமைக்க அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us