/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருமாஞ்சோலையில் நெல் கொள்முதல் மையம் திருமாஞ்சோலையில் நெல் கொள்முதல் மையம்
திருமாஞ்சோலையில் நெல் கொள்முதல் மையம்
திருமாஞ்சோலையில் நெல் கொள்முதல் மையம்
திருமாஞ்சோலையில் நெல் கொள்முதல் மையம்
ADDED : ஜூன் 13, 2025 11:52 PM
பூவந்தி: பூவந்தி அருகே திருமாஞ்சோலை நுகர் பொருள் வாணிப கழக கோடவுனில் கோடை விவசாயத்தில் நெல் பயிரிட்ட விவசாயிகளுக்காக நெல் கொள்முதல் மையத்தை எம்.எல்.ஏ., தமிழரசி திறந்து வைத்தார்.
திருப்புவனம் வட்டாரத்தில் ஆயிரம் ஏக்கரில் கோடை விவசாயம் நடைபெறும், இந்தாண்டு கடும் வறட்சி, போதிய நீர் இருப்பு இல்லாமை, கடும் வெயில் காரணமாக 500 ஏக்கருக்கும் குறைவாகவே விவசாயம் நடந்துள்ளது.
இந்த விவசாயிகளுக்காக திருமாஞ்சோலை நுகர்பொருள் வாணிப கழக கோடவுனில் நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டுள்ளது.
நுகர் பொருள் வாணிப கழக மண்டல மேலாளர், கொள்முதல் அலுவலர், ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் மூர்த்தி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் ஒரு கிலோ 24 ரூபாய் 80 பைசாவிற்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
திருப்புவனம் வட்டாரத்தில் இந்த ஒரே ஒரு இடத்தில் மட்டுமே நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டுள்ளதால் சுற்று வட்டார அனைத்து விவசாயிகளும் கோடையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொண்டு வர வாய்ப்புண்டு. 42 கிலோ எடை கொண்ட ஒரு மூடை அரசு நெல் கொள் முதல் மையத்தில் 980 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர். தனியார் வியாபாரிகள் 750 ரூபாய்க்கே கொள்முதல் செய்வதால் விவசாயிகள் அரசு நெல் கொள் முதல் மையத்திற்கே கொண்டு வருகின்றனர்.
கோடை நெல் அறுவடை ஆகஸ்ட் வரை நடைபெற உள்ளதால் வரத்து அதிகரிக்கும், தினசரி 800 மூடை கொள் முதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது ஆயிரம் மூடைகள் வரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.