/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/இறந்தவர் வருமானம் ஈட்டுவதாக சான்று வழங்கிய அதிகாரிகள்இறந்தவர் வருமானம் ஈட்டுவதாக சான்று வழங்கிய அதிகாரிகள்
இறந்தவர் வருமானம் ஈட்டுவதாக சான்று வழங்கிய அதிகாரிகள்
இறந்தவர் வருமானம் ஈட்டுவதாக சான்று வழங்கிய அதிகாரிகள்
இறந்தவர் வருமானம் ஈட்டுவதாக சான்று வழங்கிய அதிகாரிகள்
ADDED : பிப் 05, 2024 11:59 PM
இளையான்குடி : இளையான்குடி அருகே இறந்தவர் வருமானம் ஈட்டுவதாக சாான்றிதழ் வழங்கிய வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகாவிற்குட்பட்ட செங்குடி அருகே உள்ள பூலாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அமல்ராஜ்53. 2020ம் ஆண்டு செப். 6ல் தேதி இறந்து விட்டார். அவரது குடும்பத்தினர் இறப்புச் சான்றிதழையும் பெற்றுள்ளனர்.
அவரது மகன் சிரில் 21, என்பவருக்கு வேலை வாய்ப்புக்காக அமல்ராஜ் குடும்பத்தினரின் ஆண்டு வருமான சான்றிதழ் கோரி சாத்தனுார் குரூப் வி.ஏ.ஓ., சாலைக் கிராமம் வருவாய் ஆய்வாளர் மற்றும் மண்டல துணை தாசில்தாருக்கு மனு செய்துள்ளார்.
அமல்ராஜ் மாத வருமானம் 6 ஆயிரம் என்று குறிப்பிட்டு வருடத்திற்கு ரூபாய் 72,000 என கடந்த ஜனவரி 29ம் தேதி வருமான சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
சிரிலின் உறவினரான ஜெயக்குமார் கலெக்டருக்கு அனுப்பியுள்ள புகார்: அமல்ராஜ் மகன் சிரிலுக்கு வருவாய் சான்றிதழ் கேட்டு ஆன்லைனில் பதிவு செய்யும் போது அமல்ராஜின் இறப்புச் சான்றிதழையும் இணைத்தே பதிவு செய்தோம். ஆனால் வருவாய்த்துறை அதிகாரிகள் சரிவர விசாரணை செய்யாமல் அமல்ராஜின் மாத வருமானம் ரூ.6 ஆயிரம் என்று சான்றிதழ் வழங்கியுள்ளனர். சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.