ADDED : பிப் 05, 2024 11:49 PM
காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலை., சிறப்பு கல்வியியல் மற்றும் புனர்வாழ்வு அறிவியல் துறை சார்பில் பன்முகத்தன்மை கொண்ட மாணவர்களின் முழுமையான கல்வி வளர்ச்சிக்கான உளவியல் இடையீடு என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது.
அழகப்பா பல்கலை., துணைவேந்தர் க.ரவி பேசினார். மரபு நோய் ஆலோசகர் டாக்டர் பரந்தாமன், உளவியல் துறை பேராசிரியர் ராமசாமி பேசினர். இதில் 90க்கும் மேற்பட்ட கட்டுரைகள் புத்தக வடிவில் வெளியிடப்பட்டது.
சிறப்பு கல்வியியல் துறை தலைவர் சுஜாதாமாலினி வரவேற்றார். ஆராய்ச்சி மாணவர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.