/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை
வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை
வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை
வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை
ADDED : மார் 18, 2025 05:57 AM
சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் உள்ள வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என கமிஷனர் கிருஷ்ணராம் உத்தரவிட்டார்.
அவர் கூறுகையில், சிவகங்கை நகராட்சியில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், கடைகள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி முதலில் தமிழ் முதன்மையாக இடம் பெற்றிருக்க வேண்டும். தொடர்ந்து ஆங்கிலத்திலும் அவரவர் விருப்ப மொழியிலும் 5:3:2 என்ற விகிதத்தில் அமையப்பெற்றிருக்க வேண்டும்.
வணிக நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்குதல், புதுப்பித்தலின் போதே பெயர் பலகைகள் தமிழில் முதன்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளின் வர்த்தக உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.