Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அருங்காட்சியக பணி ஆய்வு

அருங்காட்சியக பணி ஆய்வு

அருங்காட்சியக பணி ஆய்வு

அருங்காட்சியக பணி ஆய்வு

ADDED : மே 22, 2025 12:19 AM


Google News
கீழடி: கீழடியில் ரூ.17 கோடியே 80 லட்ச ரூபாய் செலவில் நான்கரை ஏக்கர் பரப்பளவில் 63 ஆயிரத்து 363 சதுரஅடி பரப்பளவில் வரவேற்பு அறையுடன் இரண்டு அரங்குகளாக திறந்த வெளி அருங்காட்சிகம் அமைக்கப்படுகிறது. அருங்காட்சியக பணிகளை நேற்று அமைச்சர்கள் வேலு, பெரியகருப்பன், கலெக்டர் ஆஷாஅஜித் பார்வையிட்டனர்.

அமைச்சர்களுக்கு பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் பாண்டியன், உதவி கோட்ட பொறியாளர் நான்சி, கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் ஆகியோர் பணிகள் குறித்து விளக்கமளித்தனர். அமைச்சர்களுடன் எம்.எல்.ஏ., தமிழரசி, பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அமைச்சர் வேலு கூறுகையில்: திறந்த வெளி அருங்காட்சியக பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. முதல் அரங்கம் வரும் அக்டோபருக்குள் முடிந்து விடும். காலக்கெடு ஆகஸ்ட் 2026 வரை இருந்தாலும் பணிகள் விரைவில் நிறைவடையும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us