/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சாக்கோட்டை பகுதிகளில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு சாக்கோட்டை பகுதிகளில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு
சாக்கோட்டை பகுதிகளில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு
சாக்கோட்டை பகுதிகளில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு
சாக்கோட்டை பகுதிகளில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு
ADDED : மே 22, 2025 12:19 AM
காரைக்குடி: சாக்கோட்டை அருகே உள்ள பெத்தாச்சிகுடியிருப்பில் கோடை விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நெற்பயிரில் மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. நேற்று மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்பட்ட நெற்பயிர்களை சிவகங்கை வேளாண்மை இணை இயக்குனர் சுந்தர மகாலிங்கம், செட்டிநாடு வேளாண் ஆராய்ச்சி நிலைய தலைவர் பாபு, வேளாண்மை உதவி இயக்குனர் காளிமுத்து, சாக்கோட்டை வட்டார வேளாண் உதவி இயக்குனர் மங்கையர்கரசி ஆய்வு மேற்கொண்டனர். பாக்டீரியா இலை கருகல் நோய் பரவுவதற்கு சாதகமான காரணிகளான அதிக உரமிடுதல், காற்றுடன் கலந்த மழை, நீர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.