/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ வாகன ஓட்டுநர்களை கண்காணிக்க காரைக்குடியில் நவீன கேமரா வாகன ஓட்டுநர்களை கண்காணிக்க காரைக்குடியில் நவீன கேமரா
வாகன ஓட்டுநர்களை கண்காணிக்க காரைக்குடியில் நவீன கேமரா
வாகன ஓட்டுநர்களை கண்காணிக்க காரைக்குடியில் நவீன கேமரா
வாகன ஓட்டுநர்களை கண்காணிக்க காரைக்குடியில் நவீன கேமரா
ADDED : ஜூலை 01, 2025 02:47 AM

காரைக்குடி: தமிழகத்தின் பல பகுதிகளில் அதி நவீன ஏ.என்.பி.ஆர். (ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரெககனைசைடு) கேமராக்கள் பொருத்தப்பட்டு அபராதம் விதிக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் அதிவேகமாக செல்லும் வாகனங்கள், ஹெல்மெட் அணியாதவர்கள், காரில் சீட் பெல்ட் அணியாதவர்கள், மது அருந்தி வாகனம் ஓட்டுவோர் உள்ளிட்டோரை கண்டறிய முடியும்.
எவ்வளவு வேகத்தில் சென்றாலும் துல்லியமாக வாகனத்தின் எண்களை படம்பிடிக்க முடியும். விதிமுறைகளை மீறும் வாகனங்களின் எண்களை தானாக கண்டறிந்து இ செலான் உருவாக்கி சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு குறுஞ்செய்தி செல்லும். தற்போது காரைக்குடி பெரியார் சிலை அருகில் இந்த அதிநவீன ஏ.என்.பி.ஆர். கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது.
போலீசார் கூறும்போது, முதலாவதாக காரைக்குடி பெரியார் சிலை சிக்னலில் பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து முக்கிய சாலைகளில் பொருத்தப்பட உள்ளது என்றனர்.