/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/குமுறல்: ஊராட்சி செயலர் காலி பணியிடம் அதிகரிப்பால் பணிச்சுமை கோப்புகளை கையாள்வதில் தாமதம்குமுறல்: ஊராட்சி செயலர் காலி பணியிடம் அதிகரிப்பால் பணிச்சுமை கோப்புகளை கையாள்வதில் தாமதம்
குமுறல்: ஊராட்சி செயலர் காலி பணியிடம் அதிகரிப்பால் பணிச்சுமை கோப்புகளை கையாள்வதில் தாமதம்
குமுறல்: ஊராட்சி செயலர் காலி பணியிடம் அதிகரிப்பால் பணிச்சுமை கோப்புகளை கையாள்வதில் தாமதம்
குமுறல்: ஊராட்சி செயலர் காலி பணியிடம் அதிகரிப்பால் பணிச்சுமை கோப்புகளை கையாள்வதில் தாமதம்
ADDED : ஜூலை 01, 2025 02:49 AM

சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி உள்ளிட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும்50க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி பணியிடங்களில் மற்றொரு ஊராட்சியில் செயலாளராக பணியாற்றுபவர்கள் கூடுதலாக பணி செய்து வருகின்றனர்.
இவர்கள் தங்களது ஊராட்சியில் உள்ள பணிகளை செய்வதற்கே போதிய நேரம் இல்லாத நிலையில் கூடுதலாக இப்பணிகளை கவனித்து வருகின்றனர். தற்போது ஒரு ஊராட்சியில் 50க்கும் மேற்பட்ட கணக்குகளை எழுத்து பூர்வமாக பதிவு செய்து வரும் நிலையில் தற்போது கம்ப்யூட்டரிலும் பதிவு செய்து வருகின்றனர்.மேலும் சொத்து,குடிநீர், தொழில் உள்ளிட்ட பல்வேறு வரியினங்களையும் இவர்கள் மக்களை தேடிச் சென்று வசூல் செய்கின்றனர்.
இவற்றை வசூல் செய்யும் பணியின் போது சர்வரில் கோளாறு ஏற்படுவதால் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். ஊராட்சி தலைவர்கள் பதவியில் இருந்த போது அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட குறைகளை அவர்களிடம் தெரிவித்து வந்த நிலையில் தற்போது இந்த தலைவர் பதவி முடிந்து விட்டதால் அனைத்து தேவைகளுக்கும் ஊராட்சி செயலாளர்களையே தேடி வருகின்றனர்.
ஒரு ஊராட்சியிலேயே அன்றாட பணிகளை செய்ய முடியாத நிலை இருக்கும்போது கூடுதலாக மற்றொரு ஊராட்சியையும் கவனிப்பது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாக கூறுகின்றனர்.
சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் பாக்கியராஜ் கூறியதாவது:
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி காலியாக உள்ளதால் அன்றாட அடிப்படை பிரச்னைகளை தீர்க்க முடியாத சூழ்நிலை உள்ளது. பெரும்பாலான ஊராட்சியில் செயலாளர்கள் பணியிடம் காலியாக உள்ளதால் கூடுதலாக மற்றொரு ஊராட்சியை சேர்த்து பார்க்க முடியாமல்மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.
உள்ளாட்சி அமைப்புகளில் போதுமான நிதி வசதி இல்லாத காரணத்தினால் சாலை,குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை பிரச்னைகளை தீர்க்க முடியாமல்சிரமப்பட்டு வருகிறோம். எண்ணற்ற பிரச்னைகளை சந்தித்து வரும் நிலையில் ஊராட்சி செயலாளர்களுக்கு குறைவானஊதியமே வழங்கப்படுகிறது.
தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் பதிவறை எழுத்தர்களுக்கான அனைத்து சலுகைகளும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வு நிலை,சிறப்பு நிலை,தேக்க நிலை ஊதியம் வழங்க வேண்டும் என்றார்.