/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சிங்கம்புணரியில் தியான பயிற்சி முகாம்சிங்கம்புணரியில் தியான பயிற்சி முகாம்
சிங்கம்புணரியில் தியான பயிற்சி முகாம்
சிங்கம்புணரியில் தியான பயிற்சி முகாம்
சிங்கம்புணரியில் தியான பயிற்சி முகாம்
ADDED : ஜன 30, 2024 11:46 PM

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையுடன் இணைந்து ஹாட் புல்னஸ் தியான அமைப்பு சார்பாக இதய நிறைவு தியான பயிற்சி முகாம் நடந்தது.
முன்னாள் எம்.எல்.ஏ., ராம.அருணகிரி தலைமை வகித்தார். பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து, கல்வியாளர்கள் ராமேஸ்வரன், ராஜமூர்த்தி, சந்திரசேகர், குகன், சண்முகசுந்தரம், இளம்பரிதி பங்கேற்றனர்.
இம்முகாமில் ஏராளமான பெண்கள் பங்கேற்று தியானம், யோகா பயிற்சி பெற்றனர். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
பயிற்றுனர் ஞானாம்பிகை யோகா பயிற்சி அளித்தார். ஏற்பாடுகளை சிங்கம்புணரி இதய நிறைவு தியான மைய ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன், அமைப்பாளர்கள் முருகேசன், செல்வக் குமார் செய்திருந்தனர்.