ADDED : ஜன 06, 2024 05:44 AM
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ராமு மகன் பிச்சை, இவர் வெள்ளிக்குறிச்சியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
இவரது கடையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததையடுத்து மானாமதுரை போலீசார் சோதனை நடத்தி அங்கிருந்த 78 மது பாட்டில்களையும், ரூ.1200ஐ பறிமுதல் செய்து பிச்சையை கைது செய்தனர்.