ADDED : செப் 15, 2025 05:53 AM
காரைக்குடி : குன்றக்குடியில் அடிகளார் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது.
இக்கோயிலில் செப். 12 அன்று யாகசாலையுடன் கும்பாபிேஷக பூஜைகள் தொடங்கின.
பொன்னம்பல அடிகள் தலைமையில் கும்பாபிேஷகம் நடந்தது. அமைச்சர் பெரிய கருப்பன், மதுரை ஆதினம் ஞானசம்பந்த பரமாச்சாரியார், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சொக்கலிங்கம் பங்கேற்றனர்.
விழாவில் பொன்னம்பல அடிகள் எழுதிய பொன்மணி கதிர்கள் நுால் வெளியிடப்பட்டது. கோவிந்தானந்தா, அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி, மூத்த வழக்கறிஞர் சண்முகநாதன் பங்கேற்றனர்.