/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மடப்புரத்தில் நகை திருட்டு; சி.பி.ஐ., விசாரணை தொடக்கம் மடப்புரத்தில் நகை திருட்டு; சி.பி.ஐ., விசாரணை தொடக்கம்
மடப்புரத்தில் நகை திருட்டு; சி.பி.ஐ., விசாரணை தொடக்கம்
மடப்புரத்தில் நகை திருட்டு; சி.பி.ஐ., விசாரணை தொடக்கம்
மடப்புரத்தில் நகை திருட்டு; சி.பி.ஐ., விசாரணை தொடக்கம்
ADDED : செப் 16, 2025 12:15 AM

திருப்பவனம்; மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த பேராசிரியை நிகிதா ஜூன் 27 ல் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தாயாருடன் வந்த போது காரில் வைத்திருந்த ஒன்பதரை பவுன் தங்க நகை மற்றும் இரண்டாயிரத்து 500 ரூபாய் ரொக்கம் மாயமானது.
மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் விசாரணையின் போது கோயில் பாதுகாப்பு நிறுவன ஊழியர் அஜித்குமார் 29, உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆகஸ்ட் 20ல் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்தனர்.
நகை திருட்டு சம்பவத்தையும் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து மூன்று பேர் கொண்ட சி.பி.ஐ., அதிகாரிகள் குழு நேற்று மடப்புரத்தில் விசாரணையை தொடங்கியுள்ளது. நிகிதாவின் காரை பார்க்கிங்கில் நிறுத்திய ஆட்டோ டிரைவர் அருண், தேங்காய் பழக்கடை வியாபாரி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.