Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/அயோத்திக்கு செல்ல உதவி கேட்ட மூதாட்டியை விரட்டிய கார்த்தி

அயோத்திக்கு செல்ல உதவி கேட்ட மூதாட்டியை விரட்டிய கார்த்தி

அயோத்திக்கு செல்ல உதவி கேட்ட மூதாட்டியை விரட்டிய கார்த்தி

அயோத்திக்கு செல்ல உதவி கேட்ட மூதாட்டியை விரட்டிய கார்த்தி

ADDED : பிப் 24, 2024 02:07 AM


Google News
திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஆட்டோ டிரைவர்களுடன் கலந்துரையாட வந்த காங்., எம்.பி., கார்த்தி அயோத்தி செல்ல உதவி கேட்ட மூதாட்டியை விரட்டியடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருப்புவனத்தில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு காங்.,கட்சியினர் நேற்று மாலை ஏற்பாடு செய்திருந்தனர். மாவட்ட தலைவர் சஞ்சய்காந்தி, நகர் தலைவர் நடராஜன் பங்கேற்றனர். ஆட்டோ தொழிலில் உள்ள சிரமங்கள் குறித்து டிரைவர்களிடம் எம்.பி., கார்த்தி கேட்டு கொண்டிருந்த போது பொதுமக்கள் மனு அளித்தனர்.

செல்லப்பனேந்தலைச் சேர்ந்த மூதாட்டி வள்ளி அயோத்தி செல்ல உதவ வேண்டும் என்றார். கடுப்பான கார்த்தி உள்ளூரில் உள்ள பிள்ளையார்பட்டி, மடப்புரம் கோயிலில் போய் சாமி கும்பிடும்மா... போ ... போ என விரட்ட மூதாட்டியும், அங்கிருந்தவர்களும் அதிர்ச்சியுற்றனர்.

வள்ளி கூறுகையில், ''உள்ளூர் கோயிலில் தரிசனம் செய்ய எனக்கு தெரியாதா. அயோத்திக்கு ரயில்கள் அதிகளவில் இயக்கப்படுகிறது. தொகுதி எம்.பி., என்பதால் உதவி கேட்டேன். அதற்கு என்னை விரட்டியடித்து விட்டார்,'' என்றார்.

ஆட்டோவில் விதி மீறி பயணம்


இந்நிகழ்வுக்கு வந்த கார்த்தி திடீரென ஷேர் ஆட்டோவில் விதிகளை மீறி டிரைவருக்கு அருகில் அமர்ந்து பயணித்தார்.

கோட்டை பஸ் ஸ்டாப் முதல் மாரியம்மன் கோயில் வரை 2 கி.மீ., சென்ற எம்.பி., அங்கு நடந்த பூஜையில் பங்கேற்றார். கோயிலுக்குள் ஆகம விதிகளை மீறி காங்., கொடியுடன் சிலர் வர அவர்களை கார்த்தி கண்டித்து வெளியே போகச்சொன்னார்.

ஆனாலும் கட்சியினர் கோயிலுக்கு கட்சி கொடியுடன் சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us