ADDED : செப் 09, 2025 04:14 AM

சிவகங்கை: அரசுத்துறைகளில் 30 சதவீதத்திற்கும் மேலான காலிப்பணியிடங்களை காலமுறை சம்பளத்தில் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சகாய தைனேஸ், நாகராஜன் தலைமை வகித்தனர். ஒருங்கிணைப் பாளர்கள் ராதா கிருஷ்ணன், ராம்குமார் முன்னிலை வகித்தனர்.
கோரிக்கை: அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்த வேண்டும். தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அரசாணை எண் 243யை ரத்து செய்யவேண்டும். ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கிடையே உள்ள ஊதிய முரண் பாட்டை களைய வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கையை வலி யுறுத்தி, ஆர்ப்பாட்டம் செய்தனர். கலெக்டர் பொற்கொடியிடம் கோரிக்கை மனு வழங்கினர்.