/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் மையம் மூடல்; மாணவர்கள் ஏமாற்றம் கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் மையம் மூடல்; மாணவர்கள் ஏமாற்றம்
கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் மையம் மூடல்; மாணவர்கள் ஏமாற்றம்
கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் மையம் மூடல்; மாணவர்கள் ஏமாற்றம்
கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் மையம் மூடல்; மாணவர்கள் ஏமாற்றம்
ADDED : செப் 09, 2025 09:34 PM

சிவகங்கை; சிவகங்கை கலெக்டர் அலுவலக தரைதளத்தில் உள்ள ஆதார் மையம் பூட்டியே கிடப்பதால், பொதுமக்கள் அலைக்கழிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
இங்கு, 'எல்காட்' நிறுவனம் சார்பில் ஆதார் மையம் செயல்படுகிறது. தினமும் ஆதார் கார்டில் இன்ஷியல் மாற்றம், முகவரி மாற்றம், புதிதாக பெயர் சேர்த்தலுக்காக பள்ளி, கல்லுாரி தேவைக்காக மாணவர்கள் வருகின்றனர். இங்கு நாள் ஒன்றுக்கு 80 முதல் 100 பேர் வரை வந்து செல்கின்றனர். மாவட்ட அளவில் தாலுகா, மாநகராட்சி, நகராட்சிகளில் ஆதார் மையம் செயல்பட்டு வந்தாலும், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்திற்கு அதிகளவில் வருகை தருகின்றனர். இந்நிலையில் நேற்று எந்தவித முன்அறிவிப்பின்றி ஆதார் மையம் மூடப்பட்டன. இதனால் ஏராளமான மாணவர்கள் பெற்றோருடன் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மாற்று ஊழியர் நியமிக்கப்படும் வருவாய்துறை அதிகாரி கூறியதாவது: ஆதார் மையத்தில் பணிபுரியும் ஊழியர் இரண்டு நாள் விடுப்பில் சென்றதால், மூடிவிட்டதாக 'எல்காட்' நிர்வாக அலுவலர்கள் தெரிவித்தனர். மாற்று ஊழியரை நியமித்து மூடப்படாமல் தொடர்ந்து ஆதார் மையம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.