திருப்புத்துார் : திருப்புத்துாரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் வீடு மனைப்பட்டாக்களை அமைச்சர் பெரியகருப்பன் பயனாளிகளுக்கு வழங்கினார்.
கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசந்திரன் வரவேற்றார். தேவகோட்டை கோட்ட அளவிலான 566 பயனாளிகளுக்கு இலவச வீடு மனை பட்டா வழங்கப்பட்டது.
எம்.எல்.ஏ.,தமிழரசி, ஊராட்சி ஒன்றிய தலைவர் சண்முகவடிவேல்,பேரூராட்சி தலைவர் கோகிலாராணிநாராயணன், தாசில்தார் ஆனந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.