/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பிள்ளையார்பட்டியில் கோடி அர்ச்சனை துவக்கம்பிள்ளையார்பட்டியில் கோடி அர்ச்சனை துவக்கம்
பிள்ளையார்பட்டியில் கோடி அர்ச்சனை துவக்கம்
பிள்ளையார்பட்டியில் கோடி அர்ச்சனை துவக்கம்
பிள்ளையார்பட்டியில் கோடி அர்ச்சனை துவக்கம்
ADDED : பிப் 12, 2024 05:02 AM

பிள்ளையார்பட்டி: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் உலக நன்மைக்காக கோடி அர்ச்சனை பெருவிழா நேற்று துவங்கி, தொடர்ந்து 100 நாட்கள் நடைபெற உள்ளது.
இக்கோயிலில், தினமும் ஒரு லட்சம் அர்ச்சனை வீதம், 100 நாட்களுக்கு இந்த விழா நடைபெற உள்ளது. நேற்று காலை 6:00 மணிக்கு கணபதி ேஹாமம் உட்பட பூர்வாங்க பூஜைகளுடன் துவங்கின. மாலை 6:25 மணிக்கு விநாயகர், மருதீசர் சன்னதி முன்மண்டபத்தில் உற்ஸவ விநாயகர் தங்க மூஷிக வாகனத்தில் எழுந்தருளினர்.
பரம்பரை அறங்காவலர்கள் ராம.மெய்யப்பன், சுப.முத்துராமன் ஆகியோருக்கு சங்கல்பம் செய்து, கோடி அர்ச்சனை துவங்கியது. கோயில் தலைமை குருக்கள் பிச்சை சிவாச்சாரியார், சோமசுந்தர், ஸ்ரீதர் சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர். மூலவர் சன்னதி முன் மண்டபத்தில் அர்ச்சனை மேற்கொண்டனர்.
தினமும் காலை, மாலையில் உலக நன்மைக்காக 1008 கலசாபிேஷகம், அதிருத்ர மகாயாகம் நடக்கிறது. இந்த அர்ச்சனை மே 23 ம் தேதி நிறைவடைகிறது.