ADDED : ஜன 06, 2024 05:47 AM
காரைக்குடி: காரைக்குடி நகராட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நுாலகம் மற்றும் அறிவு சார் மைய புதிய கட்டட திறப்பு விழா நடந்தது. ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
இதில், அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் ஆஷா அஜித், முன்னாள் அமைச்சர் தென்னவன் நகராட்சி சேர்மன் முத்துத்துரை, மாங்குடி எம்.எல்.ஏ., மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் மற்றும் கலெக்டர் வருவதை அறிந்த அண்ணா நகர் பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்டோர் கவுன்சிலர் குருபாலு தலைமையில் அமைச்சரிடம் தங்கள் பகுதிக்கு பட்டா வழங்க கோரி கோரிக்கை விடுத்தனர்.
நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்ததால் கலைந்து சென்றனர்.