ADDED : மார் 25, 2025 05:24 AM
இளையான்குடி: இளையான்குடியில் தி.மு.க., சிறுபான்மை நல உரிமை பிரிவு சார்பில் புதூர் கே.கே இப்ராஹிம் அலி மேல்நிலைப் பள்ளியில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட தலைவர் நாசர் தலைமை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன், எம்.எல்.ஏ., தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர்கள் நஜூமுதீன், சேங்கைமாறன், மாவட்ட பிரதிநிதி சையதுகான், வழக்கறிஞர் முகமது மகாதீர் பங்கேற்றனர்.