ADDED : மார் 25, 2025 05:23 AM
மானாமதுரை: * மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் திறனாய்வுத் திறன் மற்றும்மாறுவேட போட்டி நடந்தது.
பள்ளி தாளாளர் கபிலன் தலைமை வகித்தார். நிறுவனர் ராஜேஸ்வரி, நிர்வாகி மீனாட்சி, முதல்வர் சாரதா ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
* பாபா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார், இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரன், தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ், குழந்தைகள் நல டாக்டர் கண்ணன், கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜா, மானாமதுரை தபால் நிலைய அலுவலர் தர்மாம்பாள், டாக்டர் கயல்விழி பங்கேற்றனர்.
பொறுப்பாளர் பாண்டியம்மாள் நன்றி கூறினார்.