சிவகங்கை ; சிவகங்கை அருகேயுள்ள இடையமேலுார் மாயாண்டி சித்தர் பீடத்தில் 17ம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது.
ஜன.2ம் தேதி கணபதி ேஹாமம், பக்தி பாடல்கள், பொங்கல் விழா, ஆன்மிக சொற் பொழிவு, தொடர்ந்து ஜன.3ம் தேதி பால்குடம், திருவாசகம் ஓதுதல், மகேஸ்வர பூஜை, அன்னதானம், பரதநாட்டியம், கலை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாட்டை இடையமேலுார் மாயாண்டி சித்தர் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர். கிராம மக்கள் பங்கேற்றனர்.