/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ குரூப் 1 தேர்வு: 2229 பேர் எழுதினர் குரூப் 1 தேர்வு: 2229 பேர் எழுதினர்
குரூப் 1 தேர்வு: 2229 பேர் எழுதினர்
குரூப் 1 தேர்வு: 2229 பேர் எழுதினர்
குரூப் 1 தேர்வு: 2229 பேர் எழுதினர்
ADDED : ஜூன் 15, 2025 11:49 PM
காரைக்குடி: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1, 1 ஏ., தேர்வினை காரைக்குடியில் உள்ள 12 தேர்வு மையங்களில் 2229 பேர் எழுதினர்.
தமிழக அளவில் காலியாக உள்ள 72 டி.எஸ்.பி., நகராட்சி, வணிகவரி உதவி கமிஷனர், துணை கலெக்டர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பம் வரவேற்றனர்.
தமிழக அளவில் இப்பதவிக்கு 2.49 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். நேற்று தேர்வு நடந்தது. காரைக்குடியில் 12 தேர்வு மையங்களில் இத்தேர்வினை எழுத 2952 பேர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று நடந்த தேர்வில் 723 பேர் பங்கேற்கவில்லை. ஒட்டு மொத்தமாக 2229 பேர் மட்டுமே எழுதினர்.
இத்தேர்வினை நேற்று காலை 9:00 முதல் மதியம் 12:30 மணி வரை பட்டதாரிகள் எழுதினர்.