/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மாங்காய் விலை வீழ்ச்சியால் நஷ்டம் இழப்பீடு கேட்கும் விவசாயிகள் மாங்காய் விலை வீழ்ச்சியால் நஷ்டம் இழப்பீடு கேட்கும் விவசாயிகள்
மாங்காய் விலை வீழ்ச்சியால் நஷ்டம் இழப்பீடு கேட்கும் விவசாயிகள்
மாங்காய் விலை வீழ்ச்சியால் நஷ்டம் இழப்பீடு கேட்கும் விவசாயிகள்
மாங்காய் விலை வீழ்ச்சியால் நஷ்டம் இழப்பீடு கேட்கும் விவசாயிகள்
ADDED : ஜூன் 15, 2025 11:49 PM
சிங்கம்புணரி,: சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஒன்றியங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் மா பயிரிட்டு வருகின்றனர். மாம்பழம் சீசனில் நத்தம், திண்டுக்கல் பகுதி வியாபாரிகள் மொத்தமாக மாங்காய்களை வாங்கிச் செல்வது வழக்கம்.
இந்தாண்டு விலை வீழ்ச்சியால் வியாபாரிகள் வரவில்லை. விவசாயிகள் பழங்களை விற்க முடியாமல் திணறுகின்றனர். வரும் ஓரிரு வியாபாரிகளும் கிலோ 2 ரூபாய் முதல் 5 ரூபாய்க்கு விலை கேட்கின்றனர். விலை கட்டுப்படி ஆகாததால் விவசாயிகள் பழங்களை பறிக்காமல் மரத்திலேயே விட்டுள்ளனர்.
எஸ்.செவல்பட்டி விவசாயி மா.ஆறுமுகம் கூறியதாவது, 60க்கும் மேற்பட்ட பல வகையான மாமரங்கள் வளர்க்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் மொத்த குத்தகைக்கு குறைந்த விலையில் வியாபாரிகள் மாங்காய்களை எடுத்து செல்வது வழக்கம். அதில் மிகப்பெரிய லாபம் இல்லை என்றாலும் விவசாயத்தை விடாமல் செய்து வருகிறோம். இந்தாண்டு மாம்பழம் விலை மிகவும் வீழ்ச்சி அடைந்ததால் வியாபாரிகள் வருவதை நிறுத்தி விட்டனர். மொத்தமாக வாங்கி சென்றாலும் வண்டி வாடகையே கட்டாது என்கிறார்கள்.
தண்ணீர் பாய்ச்சவே ஆண்டிற்கு ஒரு லட்சத்துக்கும் மேல் செலவாகிறது. வியாபாரிகள் வராததால் பழங்கள் மரத்திலேயே பழுத்து வீணாகிறது. பறவைகளுக்கும், கால்நடைகளுக்கும் போட வேண்டியுள்ளது. அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.