/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/காலவரையற்ற வேலைநிறுத்தம் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கம் முடிவுகாலவரையற்ற வேலைநிறுத்தம் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கம் முடிவு
காலவரையற்ற வேலைநிறுத்தம் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கம் முடிவு
காலவரையற்ற வேலைநிறுத்தம் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கம் முடிவு
காலவரையற்ற வேலைநிறுத்தம் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கம் முடிவு
ADDED : ஜன 25, 2024 01:42 AM

சிவகங்கை,:தமிழக அரசு ஊழியர், ஆசிரியர் கோரிக்கையை நிறைவேற்றி தராத தமிழக அரசை கண்டித்து பிப்., 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.
அரசு ஊழியர், ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி அளித்தார். ஆனால், அரசு ஊழியர், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பிற்கே முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஊக்க ஊதியம், ஒப்படைப்பு பணப்பலன், அகவிலைப்படி, இடைநிலை ஆசிரியர் ஊதிய உயர்வு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பறித்ததோடு, இடைநிலை ஆசிரியரின் பதவி உயர்வை பறிக்கும் அரசாணை 243ம் வெளியிடப்பட்டுள்ளது. இதுபோன்று ஏராளமான வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றித்தரவில்லை என ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜாக்டோ ஜியோ சிவகங்கை ஒருங்கிணைப்பாளர் ஏ.முத்துப்பாண்டியன் கூறியதாவது: ஒவ்வொரு கோரிக்கைக்காக போராடும் ஆசிரியர்களிடம் கல்வி அமைச்சர் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் தரும் உறுதிமொழி கூட நிறைவேற்றப்படவில்லை. இதனால், ஜாக்டோ ஜியோ, டிட்டோ ஜாக் கூட்டமைப்பு சார்பில் பல கட்ட போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். ஜன., 27 ல் டிட்டோ ஜாக் சார்பில் மாவட்டந்தோறும் உண்ணாவிரதம், பிப்., 10, 11ல் ஆயத்த மாநாடு, பிப்., 19 முதல் 21 வரை தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும். ஜாக்டோ ஜியோ சார்பில் ஜன.,30 ல் மாவட்ட தலைநகரில் மறியல், பிப்., 5 முதல் 9 வரை அரசியல் கட்சி தலைவர்கள் சந்திப்பு, பிப்., 10ல் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு, பிப்., 15 ல் அடையாள வேலை நிறுத்தம், பிப்., 26முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளோம், என்றார்.