காரைக்குடிக்கு இன்று கவர்னர் வருகை
காரைக்குடிக்கு இன்று கவர்னர் வருகை
காரைக்குடிக்கு இன்று கவர்னர் வருகை
ADDED : ஜன 29, 2024 05:40 AM
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை., பட்டமளிப்பு விழா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கவர்னர் ஆர்.என். ரவி இன்று கலந்து கொள்கிறார்.
காரைக்குடி அழகப்பா பல்கலை.,யில் 34வது பட்டமளிப்பு விழா நடக்கிறது. இதில், கவர்னர் ஆர்.என்., ரவி பங்கேற்று, பட்டங்களை வழங்குகிறார்.
காலை 9:00 மணிக்கு துவங்கும் விழாவிற்கு, துணைவேந்தர் க. ரவி வரவேற்கிறார். அமைச்சர் ராஜகண்ணப்பன், இந்திய தொழில்நுட்ப கழக இயக்குனர் வீ. காமகோடி விழா உரையாற்றுகின்றனர். பதிவாளர் செந்தில் ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
அதனை தொடர்ந்து காலை 11:00 மணிக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காணொளி மூலம் பிரதமர் மோடி, மாணவர்களிடம் பேசுகிறார்.
இந்நிகழ்ச்சியில் கவர்னரும் பங்கேற்கிறார். மதியம் 12:45 மணிக்கு, அழகப்பா பல்கலையில் பேராசிரியர்களுடன் கலந்துரையாடுகிறார்.