ADDED : ஜூலை 03, 2025 03:17 AM
சிவகங்கை, ஜூலை 3-கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் 45 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது
. ஹிந்து அறநிலைய சிவகங்கை இணை கமிஷனர் பாரதி தலைமை வகித்தார். உதவி கமிஷனர்கள் (சிவகங்கை) கவிதா, (ராமநாதபுரம்) ஞானசேகரன் முன்னிலை வகித்தனர். கோயில் செயல் அலுவலர் மாரிமுத்து வரவேற்றார். நேற்று காலை 10:00 மணிக்கு 45 ஜோடிகளுக்கு தாலியை எடுத்து கொடுத்து, இலவச திருமணத்தை ஹிந்து அறநிலைய அதிகாரிகள் நடத்தி வைத்தனர். மேலும் அரசு வழங்கிய சீர்வரிசை பொருட்கள் அந்தந்த தம்பதிகளுக்கு வழங்கப்பட்டன. //