ADDED : ஜூலை 03, 2025 03:18 AM

தேவகோட்டை: தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு சுவாமி நடராஜர், சிவகாமி அம்மன் ஆகியோருக்கு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து அலங்காரத்தில் நடராஜர் சிவகாமி அம்மன் ருத்ராட்ச ரதத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயிலில் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு சுவாமி சிதம்பரேஸ்வரர், சிவகாமி அம்பாள் மற்றும் மாணிக்க வாசகருக்கு அபிஷேகங்கள் நடந்தன. இதனைத் தொடர்ந்து சுவாமி, அம்பாள், மாணிக்கவாசகர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.