ADDED : ஜன 30, 2024 11:40 PM
இளையான்குடி: இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நிரல் திருவிழா- 2024, உயர்கல்வி மாணவர்களுக்கு நடைபெற்றது.
தொழில் முனைவோர் மேம்பாட்டு கழகம் இயக்குனர் உமா சங்கர் காணொளி காட்சி வாயிலாக மாணவர்களுக்கு தொழில் முனைவு மேம்பாடு குறித்து பேசினார்.
முன்னதாக முதல்வர் ஜபருல்லாகான் நிகழ்ச்சிகளை துவக்கிவைத்தார். தொழில் முனைவோர் கழக வழிகாட்டி நாசர் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
நிகழ்ச்சியில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். உதவிப்பேராசிரியர் அருள் சேவியர் விக்டர் நன்றி கூறினார்.