நெற்குப்பை, : கொன்னத்தான்பட்டியைச் சேர்ந்த கருப்பையாவிற்கும் சிங்கம்புணரி பகுதி தலைவணங்காம்பட்டியைச் சேர்ந்த கோமதி21 என்பவருக்கும் 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
கருப்பையா புதுக்கோட்டையில் ஓட்டலில் கடந்த சில நாட்களாக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலையில் வீட்டிலுள்ள மாமியார்,மாமனார் வெளியே சென்று விட்டனர். மதியம் கதவை திறந்து பார்க்கையில் கோமதி சேலையில் தூக்கிட்டு இறந்த நிலையில் இருந்தது தெரிந்தது. நெற்குப்பை இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் விசாரிக்கிறார்.