/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பிப்.15 வேலை நிறுத்தம் ஜாக்டோ ஜியோ முடிவுபிப்.15 வேலை நிறுத்தம் ஜாக்டோ ஜியோ முடிவு
பிப்.15 வேலை நிறுத்தம் ஜாக்டோ ஜியோ முடிவு
பிப்.15 வேலை நிறுத்தம் ஜாக்டோ ஜியோ முடிவு
பிப்.15 வேலை நிறுத்தம் ஜாக்டோ ஜியோ முடிவு
ADDED : பிப் 11, 2024 12:23 AM

சிவகங்கை: பிப்.15ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக ஜாக்டோ ஜியோ ஆயத்த மாவட்ட மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.
அரசு ஊழியர்கள் ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அளவிலான போராட்ட ஆயத்த மாநாடு சிவகங்கையில் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், சகாய தைனேஷ், நாகராஜன் தலைமை வகித்தனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வம் மாநாடு பற்றி பேசினார். மாநாட்டில் 2003 ஏப்.1க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.15ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வது என்றும் அதன் பின்பும் அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் பிப்.26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.