/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/திருப்பாச்சேத்தியில் நெல் அறுவடை பணி வாடகை அதிகரிப்பால் விவசாயிகள் தவிப்புதிருப்பாச்சேத்தியில் நெல் அறுவடை பணி வாடகை அதிகரிப்பால் விவசாயிகள் தவிப்பு
திருப்பாச்சேத்தியில் நெல் அறுவடை பணி வாடகை அதிகரிப்பால் விவசாயிகள் தவிப்பு
திருப்பாச்சேத்தியில் நெல் அறுவடை பணி வாடகை அதிகரிப்பால் விவசாயிகள் தவிப்பு
திருப்பாச்சேத்தியில் நெல் அறுவடை பணி வாடகை அதிகரிப்பால் விவசாயிகள் தவிப்பு
ADDED : ஜன 04, 2024 02:22 AM

திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி வட்டாரத்தில் நெல் அறுவடை தொடங்கியுள்ள நிலையில் இயந்திரங்களின் வாடகை அதிகரிப்பால் விவசாயிகள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் வடகிழக்கு பருவமழையை நம்பி நான்காயிரம் எக்டேரில் நெல் பயிரிடப்படுகிறது. பம்ப் செட் மூலம் விவசாய பணிகளில் ஈடுபட்ட விவசாயிகள் ஆகஸ்டில் நடவு செய்து தற்போது பொங்கலை ஒட்டி அறுவடையை தொடங்கியுள்ளனர்.
திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இயந்திரங்கள் வருவதுண்டு. இங்கு நீண்ட நாட்கள் தங்கி நெல் அறுவடை முடிந்த உடன் திரும்பி செல்வர்.
செயின் வண்டி, டயர் வண்டி என இரு அறுவடை இயந்திரங்கள் உண்டு, நன்கு காய்ந்த வயல்களில் டயர் வண்டி மூலம் நெல் அறுவடை செய்யப்படும், ஈரமான வயல்களில் செயின் வண்டி மூலம் மட்டுமே அறுவடை செய்ய முடியும், டயர் வண்டிகளுக்கும் செயின் வண்டிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வரை வாடகை வித்தியாசம் இருப்பதால் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
கணேசன் கூறுகையில்:
செயின் வண்டிக்கு மணிக்கு மூவாயிரத்து 200 ரூபாய், கடந்தாண்டு மூவாயிரம் ரூபாய் என்ற நிலையில் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் வாடகையும் உயர்ந்துள்ளது. டயர் வண்டிக்கு இரண்டாயிரத்து 200 ரூபாய் தான் .ஆனால் ஈரமான வயல்களில் டயர் வண்டி இறங்கினால் சிக்கி கொள்ளும் வாய்ப்புள்ளது என்பதால் செயின் வண்டி தான் அதிகமாக பயன்படுத்தப்படும், என்றார்.
கடந்த பத்து நாட்களுக்கு முன் பெய்த மழையால் வயல்களில் இன்னமும் ஈரம் காயவில்லை. வெயிலும் அதிகமாக இல்லாததால் வேறு வழியின்றி கூடுதல் வாடகை கொடுத்து செயின் வண்டி மூலம் விவசாயிகள் அறுவடை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.