/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/விதைகள், நாற்றுக்கள் கிடைக்காமல் விவசாயிகள் அலைச்சல்விதைகள், நாற்றுக்கள் கிடைக்காமல் விவசாயிகள் அலைச்சல்
விதைகள், நாற்றுக்கள் கிடைக்காமல் விவசாயிகள் அலைச்சல்
விதைகள், நாற்றுக்கள் கிடைக்காமல் விவசாயிகள் அலைச்சல்
விதைகள், நாற்றுக்கள் கிடைக்காமல் விவசாயிகள் அலைச்சல்
ADDED : ஜூலை 19, 2024 11:55 PM

எஸ்.புதுார் : எஸ்.புதுாரில் காய்கறி பயிடுவதற்கு தேவையான விதைகள்,
நாற்றுக்கள் தடையின்றி கிடைக்க அங்கு தோட்டக்கலை பண்ணை அமைக்க விவசாயிகள்
வலியுறுத்தியுள்ளனர்.
மாவட்டத்தில் முக்கிய விவசாய பூமியாகவும், காய்கறி சாகுபடியில் தன்னிறைவு பெற்ற பகுதியாகவும் விளங்கும் எஸ்.புதுாரில் மலைக் குன்றுகளுக்கு இடையே விவசாயிகள் தோட்டங்கள் அமைத்து பல்வேறு காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். சீசன் நேரங்களில் விதைகள், நாற்றுக்கள் கிடைக்காமல் இப்பகுதி விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
இங்கு ஆயிரம் ஏக்கரில் மிளகாய், கத்தரி, வெண்டை, தக்காளி ஆண்டு முழுவதும் பயிரிட்டு வருகின்றனர். ஆனால் மிளகாய் கத்தரி போன்ற நாற்றங்கால் கிடைக்காமல் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வாங்கி வந்து பயிர் செய்கின்றனர். இவ்வொன்றியத்தில் சில தனியார் நாற்றங்கால் பண்ணைகள் செயல்பட்டாலும் பக்கத்து மாவட்டங்களில் இருந்து வந்து விவசாயிகள் அவற்றை வாங்கி சென்று விடுவதால் இப்பகுதி விவசாயிகளுக்கு அவை சரிவர கிடைப்பதில்லை. இதனால் தனியார் கடைகளில் வீரியமற்ற விதை, நாற்றங்கால்களை வாங்கி பயிரிட்டு நஷ்டம் அடைகின்றனர்.
வீரியம் குறைவான விதைகள் மூலம் பயிர் செய்யும் போது அவை பூச்சி தாக்குதல்களை சமாளிக்க முடியாமலும், குறுகிய காலத்திலேயே மகசூலை இழந்தும் விடுகிறது. ஏற்கனவே இம்மாவட்டத்தில் நேமம், தேவகோட்டை கிளாதரி ஆகிய இடங்களில் தோட்டக்கலை பண்ணை உள்ளது போல், எஸ்.புதுார் ஒன்றியத்திலும் தோட்டக்கலை பண்ணை அமைத்து விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை, நாற்றங்கால், பழமரக் கன்றுகளை வழங்க முன்வர வேண்டும்.
ஏ.வி.நாகராஜன், பொன்னடப்பட்டி; எஸ் புதுார் முழுக்க சுயசார்பு விவசாயத்தை நம்பி ஆண்டு முழுவதும் உழைத்து வரும் விவசாயிகளுக்கு வழிகாட்டல் முழுமையாக கிடைப்பதில்லை.
எனவே இப்பகுதிக்கு என்று தனியாக தோட்டக்கலைப் பண்ணை அமைத்து அவ்வப்போது ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உதவ அரசு முன் வர வேண்டும்.