/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அரசு பஸ் டயரில் கழன்று ஓடிய இரும்பு நட்டு; பிரேக்லாக் பிரச்னை யால் வழியில் நின்றது சிவகங்கையில் பழுதான பஸ்களால் பரிதவிப்பு அரசு பஸ் டயரில் கழன்று ஓடிய இரும்பு நட்டு; பிரேக்லாக் பிரச்னை யால் வழியில் நின்றது சிவகங்கையில் பழுதான பஸ்களால் பரிதவிப்பு
அரசு பஸ் டயரில் கழன்று ஓடிய இரும்பு நட்டு; பிரேக்லாக் பிரச்னை யால் வழியில் நின்றது சிவகங்கையில் பழுதான பஸ்களால் பரிதவிப்பு
அரசு பஸ் டயரில் கழன்று ஓடிய இரும்பு நட்டு; பிரேக்லாக் பிரச்னை யால் வழியில் நின்றது சிவகங்கையில் பழுதான பஸ்களால் பரிதவிப்பு
அரசு பஸ் டயரில் கழன்று ஓடிய இரும்பு நட்டு; பிரேக்லாக் பிரச்னை யால் வழியில் நின்றது சிவகங்கையில் பழுதான பஸ்களால் பரிதவிப்பு
ADDED : ஜூலை 19, 2024 11:54 PM

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் அடிக்கடி பழுதாகும் அரசு பஸ்களால் பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்படும் அவல நிலை தொடர்ந்து வருகிறது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளையில் இருந்து பழைய புறநகர் பஸ்சை புதுப்பித்து, டவுன் பஸ் போல் ஓட்டி வருகின்றனர்.
நேற்று தேவகோட்டையிலிருந்து - சிவகங்கை வந்த (டி.என்.,55- என்.0887) டவுன் பஸ் காலை 9:35 மணிக்கு நாட்டரசன்கோட்டை அருகே வந்த போது, பஸ் டயரில் பொருத்தியிருந்த இரும்பு நட்டுக்கள்' கழன்று விழவே, டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டார்.
அதே போன்று தேவகோட்டையில் இருந்து சிவகங்கை வழியாக மதுரை சென்ற அரசு பஸ் (டி.என்.,63 என்.1685)சும், நாட்டரசன் கோட்டை அருகே பிரேக் லாக் ஆன நிலையில் பழுதாகி நின்றது.
இது போன்று சிவகங்கை மாவட்டத்தில் அடிக்கடி அரசு பஸ்கள் பழுதாகி நடுரோட்டில் நிற்பது அதிகரித்து வருகின்றன. அரசு பஸ்களை நம்பி பயணிக்கும் பயணிகளை டிரைவர், கண்டக்டர்கள் நடுரோட்டிலேயே இறக்கிவிட்டு செல்கின்றனர்.
சிவகங்கை - நாட்டரசன்கோட்டை வழியாக சென்ற பிற பஸ்கள் நிற்காமல் சென்றதால், பழுதான பஸ்சில் வந்த பயணிகள் அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தில் பயணித்த கொடுமை சிவகங்கையில் நேற்று நடைபெற்றது.
அரசு போக்குவரத்து கழக கிளைகளில் பஸ்களை பராமரிக்க மெக்கானிக் இல்லாமல், பஸ்களை ஓட்டுவதால் இது போன்று பஸ் பழுதாகி நிற்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
இது குறித்து விசாரிக்க, காரைக்குடி அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளை அலைபேசியில் தொடர்பு கொண்டால், அலைபேசியை எடுத்து பேச அதிகாரிகள் முன்வரவில்லை.